ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் டி10 லீக் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று ஷேன் வாட்சன் தலைமையிலான டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி எலிமினேட்டர் மற்றும் குவாலிஃபையர் ஆட்டங்களில் பங்கேற்றது.
டி10 லீக்கின் எலிமினேட்டர் சுற்றில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி, திசாரா பெரேரா தலைமையிலான பங்களா அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் டாஸ் வென்ற டெக்கான் அணி பந்துவீச்சைத் தேர்வு செயதது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய பங்களா அணி, ரோஸ்ஸோவின் அதிரடியால் 10 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை எடுத்தது. சிறப்பாக விளையாடிய ரோஸ்ஸோ 55 ரன்களை விளாசினார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய டெக்கான் அணி லாரன்ஸ் அதிரடியால் 9.1 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அடைந்து டி10 லீக்கின் குவாலிஃபையர்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. இதில் சிறப்பாக விளையாடிய லாரன்ஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
பின் நேற்று இரவு தொடங்கிய குவாலிஃபையர்ஸ் ஆட்டத்தின் டெக்கான் அணி, டேவிட் மாலன் தலைமையிலான கலந்தர்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெக்கான் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.