டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 21ஆவது லீக் போட்டியில் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், மதுரை பேந்தர்ஸ் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற மதுரை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்பின் களமிறங்கிய மதுரை பேந்தர்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் கேப்டன் சந்திரன் 39 ரன்களும், சுப்ரமனியன் 31 ரன்களும் எடுத்தனர்.
பந்தை சிக்ஸருக்கு விரட்டிய சுப்ரமணியன் இதன் மூலம் 20 ஓவர்களில் மதுரை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்தது. சூப்பர் கில்லீஸ் அணி சார்பில் ஹரிஷ் குமார் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பந்தை சிக்ஸருக்கு விரட்டிய சசிதேவ் இதையடுத்து களமிறங்கிய சூப்பர் கில்லீஸ் அணி, எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் சசிதேவ் 51 ரன்களும், கோபிநாத் 45 ரன்களும் எடுத்தனர்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த்ததால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்களை மட்டுமே எடுத்தது. மதுரை அணி சார்பில் அபினேஷ் தன்வர் மற்றும் கிரன் ஆகாஷ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட கிரன் ஆகாஷ் இதன் மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பேந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசி அணியின் வெற்றிக்கு உதவிய கிரன் ஆகாஷ் ஆட்டநாயகனாத் தேர்வு செய்யப்பட்டார்.