தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தொலைக்காட்சி சர்ச்சை - மனம்திறந்த ஹர்திக் பாண்டியா - ஹர்திக் பாண்டியா தொலைக்காட்சி சர்ச்சை

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து சர்ச்சையாகப் பேசியது குறித்து ஹர்திக் பாண்டியா முதல்முறையாக கருத்து கூறியுள்ளார்.

the-ball-was-not-in-my-court-hardik-pandya-on-tv-show-controversy
the-ball-was-not-in-my-court-hardik-pandya-on-tv-show-controversy

By

Published : Jan 9, 2020, 7:00 PM IST

இந்திய வீரர்கள் கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இயக்குநர் கரண் ஜோகரின் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, பெண்கள் குறித்து இருவரும் கூறிய கருத்து இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் இருவரும் சில போட்டிகளில் கலந்துகொள்வதிலிருந்து பிசிசிஐ தடை விதித்தது. தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி சர்ச்சை குறித்து முதல்முறையாக ஹர்திக் பாண்டியா மனம் திறந்துள்ளார். அதில், "எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்து எங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அந்த நேரத்தில் பந்து எங்களின் கைகளில் இல்லை. அது வேறு ஒருவரின் கைகளில் இருந்தது. அதிலும் விரும்பப்படாத இடத்தில் இருந்தது” எனக் கருத்து கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா, செர்பிய நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் உடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட நிலையில், இக்கருத்தை கூறியுள்ளார்.

நீண்ட நாள்களாக காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் ஹர்திக் பாண்டியா, தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஏ அணியில் இடம்பெற்றுள்ளார்.

இதையும் படிங்க:நிச்சயதார்த்தமான ஹர்திக் பாண்டயாவுக்கு முன்னாள் காதலி வாழ்த்து!

ABOUT THE AUTHOR

...view details