இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மட்டும் கலந்து கொள்ளும் ஆஷஸ் தொடர் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் ஆடிய ஆஸ்ரேலிய அணி ஆரம்பத்திலிருந்தே தடுமாறியது. 8 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்து பரிதாப நிலையிலிருந்த ஆஸ்ரேலிய அணியை ஸ்டீவன் ஸ்மித் பொறுப்புடன் ஆடிக் காப்பாற்றினார். சிறப்பாக ஆடிய அவர் 144 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆஸ்ரேலிய அணி 80.4 ஓவர்கள் முடிவில் 284 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்டானது.
பொறுப்புடன் ஆடிய இங்கிலாந்து... மீண்டும் சறுக்கிய ஆஸி - ஆஷஸ் டெஸ்ட் அப்டேட் - india
பிரிமிங்ஹாம்: ஆஷஸ் தொடரின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 374 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து அணி தரப்பில் மூத்த வீரர் ஸ்டுவர்ட் ப்ராடு 5 விக்கெட்டுகளும், வோக்ஸ் மூன்று விக்கெட்டுகளும் எடுத்தனர். அடுத்து ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ராய் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எனினும், ரோரி பர்ன்ஸும் கேப்டன் ரூட்டும் நிதானமாக ஆடினர். சிறப்பாக ஆடிய ரோரி 133 ரன்களிலும், ரூட் 57 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பென் ஸ்டோக்ஸ் அரை சதமடித்து பெவிலியன் திரும்பினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர்.
இறுதியில், 374 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பேட் கம்மின்ஸ், லயான் 3 விக்கெட்டுகளை எடுத்தனர். பேட்டின்சன், பீட்டர் சிடில் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர். இதனைத் தொடர்ந்து, ஆடிய ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 124 எடுத்து ஆடி வருகிறது. ஸ்டீவன் ஸ்மித் 46 ரன்களுடனும், ஹெட் 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இத்துடன் மூன்றாவது நாள் ஆட்டம் நிறைவுற்றது. ஆஸ்திரேலியா 34 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.