தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பிளெட்சர் அதிரடியால் மூன்றாம் இடத்தைப் பிடித்த பங்களா டைகர்ஸ்! - சிறப்பாக விளையாடிய பிளெட்சர் அரைசதமடித்து அசத்தினார்

அபுதாபி: டி10 லீக் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் பங்களா டைகர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கலந்தர்ஸ் அணியை வீழ்த்தியது.

3rd Place Play-off

By

Published : Nov 25, 2019, 11:02 AM IST

ஐக்கிய அரபு நடுகளில் நடைபெற்று வந்த டி10 லீக் கிரிக்கெட் தொடர் நேற்றோடு முடிவுக்கு வந்தது. இத்தொடரின் மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில் திசாரா பெரேரா தலைமையிலான பங்களா டைகர்ஸ் அணி, டேவிட் மாலன் தலைமையிலான கலந்தர்ஸ் அணியை எதிர் கொண்டது.

இதில் முதலில் டாஸ் வென்ற பங்களா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய கலந்தர்ஸ் அணிக்கு பிலிப் சால்ட், டேவிட் மாலன் சிறப்பான ஆட்டத்தைத் தந்தனர். இதன் மூலம் கலந்தர்ஸ் அணி 10 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து, 109 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சால்ட் 30 ரன்களை எடுத்தார்.

அதனைத் தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி, களமிறங்கிய ஆண்ட்ரே பிளெட்சர், ரோஸ்ஸோ இணை அதிரடியான தொடக்கத்தைத் தந்தது. இதில் சிறப்பாக விளையாடிய பிளெட்சர் அரை சதமடித்து அசத்தினார்.

இதன் மூலம் பங்களா டைகர்ஸ் அணி 9.4 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அடைந்து, டி10 லீக் கிரிக்கெட் தொடரில் மூன்றாம் இடத்தைப் பிடித்து அசத்தியது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஆண்ட்ரே பிளெட்சர் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: ஸ்பின் உதவியில்லாமல் பவுலர்களால் மட்டுமே இந்திய அணி படைத்த சாதனை!

ABOUT THE AUTHOR

...view details