தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டெஸ்ட் கிரிக்கெட் ஆடிவிட்டால் எவ்வகையான கிரிக்கெட்டையும் ஆடலாம்; மாற்றம் காணவுள்ள மகளிர் கிரிக்கெட்! - Test cricket makes you a complete player revive format in womens game

டெஸ்ட் கிரிக்கெட் ஆடிவிட்டால் எந்த வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடிவிடலாம் என சன்னட் கிரிக்கெட் கிளப் பயிற்சியாளர் டாரக் சின்ஹா கூறியுள்ளார்.

மகளிர் கிரிக்கெட்

By

Published : May 26, 2019, 9:28 AM IST

பிசிசிஐ சார்பாக மகளிர் கிரிக்கெட் கேப்டன்களுடன் முதன்முறையாக ஒரு ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. அதில் மகளிருக்கான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள், மகளிர் கிரிக்கெட்டில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இது குறித்து முன்னாள் இந்திய வீராங்கனை சுதா ஷா பேசுகையில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட்டர்கள் மட்டுமே டெஸ்ட் தொடரினை விளையாடிவருகின்றனர். கிரிக்கெட் என்பது ஒருநாள், டி20 வகைப் போட்டிகள் என்பதைத் தாண்டி டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் ஆடிவிட்டால் எவ்வகையான போட்டிகளையும் ஆடிவிடலாம். ஐசிசி இதனை பற்றி பேசாதாது வருத்தமளிக்கிறது என்றார்.

அதேபோல் ஐபிஎல் தொடரின்போது நடைபெற்ற பெண்கள் டி20 லீக்கிற்கு யாரு எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. முக்கியமாக இறுதிப் போட்டிக்கு நான்காயிரம் ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் மைதானத்திற்கு வெளியே நின்றார்கள்.

இது ரசிகர்கள் மகளிர் கிரிக்கெட்டை பார்க்க தயாராக உள்ளதைக் காட்டுகிறது. எனவே அடுத்த ஆண்டு மூன்று அணிகளிலிருந்து நான்கு அணிகளாக எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. தொடர்ந்து இவ்வகையான போட்டிகள் நடைபெற்றால் மட்டுமே ஐபிஎல் போன்று அணிகளை வாங்குவதற்கு உரிமையாளர்கள் எதிர்காலத்தில் வருவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் மிதாலி ராஜ், ஹர்மன் ப்ரீத் கவுர், ஜுனம் கோசுவாமி, ஸ்மிருதி மந்தானா ஆகியோர் தங்களின் சிறந்த பயிற்சியாலும் முயற்சியாலும் இந்த நிலையில் உள்ளார்கள். இவர்களைப் போன்று கிரிக்கெட்டின் தூதுவர்களாக இன்னும் நிறைய வீராங்கனைகள் தேவை. அதற்காக மாவட்ட அளவில் நடைபெற்றுவரும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் பள்ளி அளவில் முன்னேற வேண்டும். பள்ளி காலத்திலேயே முறையான பயிற்சிகள் அளிக்க வேண்டும் என மகளிர் கிரிக்கெட் எழுச்சி காண உள்ளது எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details