தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கிரிக்கெட்டில் மீண்டும் களமிறங்கும் டெண்டுல்கர்! - விரேந்திர சேவாக்

இந்தாண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரில் முன்னாள் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, விரேந்திர சேவாக் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

Tendulkar to be back in action; Raipur to host Road Safety World Series T20 next month
Tendulkar to be back in action; Raipur to host Road Safety World Series T20 next month

By

Published : Feb 9, 2021, 9:20 PM IST

இந்தியாவில் கிரிக்கெட் அதிகம் பார்க்கப்படும் விளையாட்டாக உள்ளது. எனவே கிரிக்கெட் வீரர்களை வைத்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், சாலைகளில் நடத்தை விதிகள் குறித்து மக்களின் மனநிலையை மாற்றுவதற்காகவும் இந்த தொடர் நடத்தப்படுகிறது.

ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி "சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர் " நடத்தப்பட்டு வருகிறது. இந்த டி20 தொடரில் இந்தியா , தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா , இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 5 அணிகளின் ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாட உள்ளனர்.

இத்தொடரின் முதலாவது சீசன் கரோனா அச்சுறுத்தல் காரணமாக நான்கு போட்டிகளுடனே ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது சீசன் வருகிற மார்ச் 02ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இத்தொடரானது ராய்பூரில் அமைந்துள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதில், கிரிக்கெட்டின் முன்னாள் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக், பிரையன் லாரா, சந்தர் பால், பிரெட் லீ, , முத்தையா முரளிதரன், தில்ஷன் உள்ளிட்ட வீரர்கள் விளையாடவுள்ளனர். இத்தகவலையறிந்த கிரிக்கெட் ரசிகர்கள் மீண்டும் தங்களது ஹீரோக்களை களத்தில் காணுவதற்காக பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க:உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: முதலிடத்திற்கு முன்னேறியது இங்கிலாந்து!

ABOUT THE AUTHOR

...view details