தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

லாரா, கெய்ல் கொடுத்த கிஃப்ட்... ரகசியம் வெளியிட்ட சச்சின்...! - sachin about gayle

2013ஆம் ஆண்டில் சச்சின் ஆடிய கடைசி டெஸ்ட் போட்டிக்கு பின் அவரது வீட்டுக்கு சென்ற லாரா, கிறிஸ் கெய்ல் ஆகியோர் வழங்கிய பரிசு பற்றி பேசிய வீடியோவை சச்சின் வெளியிட்டுள்ளார்.

tendulkar-reveals-special-gift-lara-gayle-presented-him
tendulkar-reveals-special-gift-lara-gayle-presented-him

By

Published : Nov 17, 2020, 3:29 PM IST

கிரிக்கெட்டின் மேஸ்ட்ரோ என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது கடைசி மற்றும் 200ஆவது டெஸ்ட் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆடினார்.

நேற்றோடு சச்சின் ஓய்வை அறிவித்து 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் சச்சின் குறித்த தங்களது நினைவுகளை பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையில் ஓய்வுக்கு பின் தனது நண்பர்களான லாரா, கிறிஸ் கெய்ல் ஆகியோர் வழங்கிய பரிசு குறித்து சச்சின் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், '' 7 ஆண்டுகளுக்கு முன்னதாக இன்று, எனது நண்பர்களான லாரா, கிறிஸ் கெய்ல் ஆகியோர் இந்த ஸ்டீல் டிரம் -ஐ (drum) பரிசாக வழங்கினர். இசைக் கருவியை பரிசாக வழங்குவது மிகச்சிறந்ததது. மீண்டும் நன்றி கூட கடமைப்பட்டுள்ளேன். என்மீது எந்த அளவிற்கு அன்பு வைத்திருக்கிறார்களோ, அதே அளவிற்கு அவர்கள் மீது அன்பு வைத்துள்ளேன்.

ஒருமுறை லாரா என் வீட்டிற்கு வந்தபோது, இந்த டிரம்-ஐ இசைத்தார். அதிலிருந்து வந்த ஒலி விவரிக்க முடியாத வகையில் இருந்தது. நானும் இசைக்க முயற்சிக்கிறென். ஆனால் அதேபோன்ற ஒலி வருமா என்றால், தெரியாது. எனக்காக நீங்கள் செய்த அனைத்து விஷயங்களுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்'' என்று பேசிய பின், டிரம்-ஐ இசைக்கத் தொடங்கினார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் சச்சின் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:'ஷாகிப் அல் ஹாசன் உயிருக்கு அச்சுறுத்தல்'- துண்டு துண்டாக வெட்டுவேன் என இளைஞர் பகிரங்க மிரட்டல்!

ABOUT THE AUTHOR

...view details