பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை முதல் இன்னிங்சில் 195 ரன்களுக்கும், 2ஆவது இன்னிங்சில் 200 ரன்களுக்கும் சுருட்டியது. மேலும் இப்போட்டியை இந்தியா 8 விக்கெட்டு வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது.
அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி விமர்சனங்களுக்குள்ளான இந்திய அணியை, பொறுப்பேற்று வழிநடத்தி மெல்போர்னில் வெற்றியைத் தேடித்தந்த அஜிங்கிய ரஹானேவை இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பதிவில், “விராட், ரோஹித், இஷாந்த் & ஷமி இல்லாமல் ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது ஒரு மிகப்பெரும் சாதனை.
அதிலும் முதல் டெஸ்டில் ஏற்பட்ட படுதோல்வியைப் பின்னுக்குத் தள்ளி, தொடரை சமன் செய்ய அணி காட்டிய முயற்சிக்கு என்னுடைய பாராட்டுகள்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பதிவில், “இது ஒரு அற்புதமான வெற்றி. ஒட்டுமொத்த அணியின் உழைப்புக்கும், முயற்சிக்கும் கிடைத்த வெற்றி. என் அணி வீரர்களை எண்ணி நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.