தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ரெடியான 90ஸ் லெஜண்ட்ஸ்... போட்றா வெடிய - 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த வீரர்கள்

சாலை பாதுகாப்பு உலக டி20 தொடரில் சச்சின், சேவாக், உள்ளிட்ட 110 ஓய்வுபெற்ற வீரர்கள் விளையாடவுள்ளனர்.

Tendulkar

By

Published : Oct 17, 2019, 11:46 PM IST

Updated : Oct 18, 2019, 11:43 AM IST

90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களான சச்சின், சேவாக், பிரட் லீ, ஜான்டி ரோட்ஸ், முத்தையா முரளிதரன் உள்ளிட்ட வீரர்கள் ஓய்வு பெற்றிருந்தாலும், தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கவுள்ளனர். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக அடுத்தாண்டு உலக டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.

இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து அணிகளிலிருந்து ஓய்வுபெற்ற 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த நட்சத்திர வீரர்கள் விளையாடவுள்ளனர். இந்தத் தொடருக்கான தொடக்க விழா மும்பையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சச்சின், பிரையன் லாரா, சேவாக், பிரட் லீ, தில்ஷான், ஜான்டி ரோட்ஸ் ஆகியோர் கலந்துக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

ரெடியான 90ஸ் லெஜண்ட்ஸ்

அடுத்தாண்டு பிப்ரவரி 2 முதல் 16ஆம் தேதி வரை இந்தத் தொடர் மும்பை, புனேவில் நடைபெறவுள்ளது. மொத்தம் ஐந்து அணிகளும், ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொள்வர். முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். மொத்தம் 10 போட்டிகள் இந்தத் தொடரில் நடைபெறவுள்ளன.

கேப்டன்கள் விவரம்:

  1. இந்தியன் லெஜண்ட்ஸ் - சச்சின்
  2. வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் - லாரா
  3. இலங்கை லெஜண்ட்ஸ் - தில்ஷன்
  4. தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ் - ஜான்டி ரோட்ஸ்
  5. ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ் - பிரட் லீ

தற்போது இந்த லெஜண்ட்களின் ஆட்டத்திற்காக பிப்ரவரி 2ஆம் தேதியை எதிர்நோக்கி 90ஸ் கிட்ஸ்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Last Updated : Oct 18, 2019, 11:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details