T20WorldCup: அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஏழாவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி நமிபியா அணியை எதிர்கொண்டது.
இதில் முதலில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணி தொடக்கத்தில் சிறிது தடுமாறியது. இதனால் அந்த அணி 48 ரன்களுக்குள்ளாகவே மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன் பின் களமிறங்கிய நெதர்லாந்து அணியின் நட்சத்திர வீரர் ரியன் டென் டெஸ்காடே தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தத் தொடங்கினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டென் டெஸ்காடே 40 பந்துகளில் நான்கு பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 59 ரன்களைச் சேர்த்தார்.