தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

உலகக்கோப்பை ரசிகர்களில் கவனம் ஈர்த்த சூப்பர் ரசிகை காலமானார்; பிசிசிஐ இரங்கல்! - CWC19

டெல்லி: உலககோப்பை தொடரின்போது இந்திய அணியின் சூப்பர் ரசிகையாக அடையாளம் காணப்பட்ட 87 வயதான சாருலதா படேல் காலமானார்.

team-indias-87-year-old-superfan-charulata-patel-passes-away
team-indias-87-year-old-superfan-charulata-patel-passes-away

By

Published : Jan 16, 2020, 3:52 PM IST

கிரிக்கெட் ஆடுவதற்கு பேட், பால், மைதானம், வீரர்கள் என எவ்வளவு இருந்தாலும் அதனை ரசிப்பதற்கு ரசிகர்கள் வேண்டும். டி20, டி10, டெஸ்ட் கிரிக்கெட், உலகக்கோப்பை என அனைத்து வகையான கிரிக்கெட்களுக்கும் காரணம் ரசிகர்களை ஈர்க்கவேண்டும் என்பதுதான். இங்கே கிரிக்கெட் உயிர்ப்போடு இருக்கிறது என்றால், அதற்கு ரசிகர்களும் முக்கிய காரணம்.

சில மாதங்களுக்கு முன்னதாக நடந்த உலகக்கோப்பைத் தொடரில் 87ஆவது வயதில் மைதானத்திற்கு வந்து இந்திய அணி மீதான நம்பிக்கையையும், கிரிக்கெட் மீதான ஆர்வத்தையும் வெளிக்காட்டியவர் சாருலதா படேல்.

சாருலதா படேல்

உலகக்கோப்பை தொடரின்போது பிர்மின்ஹாமின் எட்ஜ்பாஸ்டனில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான போட்டியின்போது மைதானத்திற்கு சென்று இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தினார். இவர் மைதானத்தில் செய்த சேட்டைகள், இவருக்கு ரசிகர்களையும் பெற்றுக்கொடுத்தது.

சாருலதா படேலுக்கு இருந்த கிரிக்கெட் மீதான ஆர்வத்தைப் பார்த்து, இந்திய கிரிக்கெட் வீரர்கள் அவரை நேரில் சந்தித்தனர். அது அனைவரையும் கவர்ந்தது.

ரோஹித் சர்மாவுடன் சாருலதா

இந்நிலையில் ஜனவரி 13ஆம் தேதி சாருலதா படேல் உயிரிழந்ததாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையறிந்த பிசிசிஐ நிர்வாகம், தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலைப் பதிவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் சாருலதா படேலுக்கு தங்களது இரங்கலை சமூகவலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸை அலறவிட்ட அயர்லாந்து!

ABOUT THE AUTHOR

...view details