வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, ஒரு நாள் தொடர்களுக்குப் பிறகு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. நாளை (வியாழக்கிழமை) முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் ஜெர்சி எண்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு நாள், டி20 போட்டிகளில் இந்திய வீரர்கள் அணியும் ஜெர்சி எண்களே டெஸ்ட் தொடர்களுக்கான ஜெர்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கேப்டன் விராட் கோலி 18ஆம் எண், நடுவரிசை பேட்ஸ்மேன் அஜிங்க்யா ரஹானே 3ஆம் எண், பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவ் முறையே 11, 23ஆம் எண்களை அணிந்துள்ளனர். ஸ்பின்னர்கள் அஸ்வின், ஜடேஜா முறையே 99, 8ஆம் எண்களை அணிந்துள்ளனர்.