டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விளையாடும் அணிகளின் தரவரிசைப் பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. அதில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் முதலிடமும், ஒருநாள் போட்டிகளில் இரண்டாம் இடமும் பிடித்திருந்தது. இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் முதலிடத்தில் இருந்ததால், தற்போதுள்ள ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி வலிமையானதா என ரசிகர்களிடையே விவாதம் எழுந்தது.
இதுகுறித்து சமீபத்தில் ஓய்வுபெற்ற முன்னாள் வீரர் இர்பான் பதான் கருத்து கூறியுள்ளார். அதில், ''சில வருடங்களுக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியினர் மிகச்சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தினர். அப்போது நாங்கள் ஆஸ்திரேலிய அணி செயல்படுவதை போன்று செயல்பட முயற்சித்தோம். ஆனால் தற்போதுள்ள இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட வலிமையானது என்றே கருதுகிறேன்.