இந்தியா வங்கதேச அணிகளுக்கு இடையிலான தொடர் நவம்பர் 3ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் அதற்காக இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் ஃபீல்டிங்க் பயிற்சியாளரான ஆர்.ஸ்ரீதர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் அவர் கூறுகையில், ‘ஆடுகளத்தில் ஜடேஜாவின் ஃபீல்டிங் இந்திய அணியின் நம்பிக்கையை உயர்த்துகிறது. அவருடைய அபார திறமையினால் எதிரணி வீரர்களை எப்போதும் பயத்திலேயே இருக்க வைப்பார். கடந்த பத்தாண்டுகளில் ஜடேஜாவே இந்திய அணியின் மிகச்சிறந்த ஃபீல்டர் என்று கூறுவேன். ஏனெனில் கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய அணியில் அவரைப்போல் ஃபீல்டிங் செய்தவர் எவரும் இல்லை’ என தெரிவித்தார்.