தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

அரசிற்கு ஆதரவாக களமிறங்கிய பிசிசிஐ! #TeamMaskForce - சச்சின் டெண்டுல்கர்

கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்த்து போராடிவரும் இந்திய மக்களுக்காக, மத்திய அரசு கொண்டுவந்த 'பொதுமக்கள் வெளியே செல்லும் போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்’ என்பதை வலியுறுத்தி பிசிசிஐ தரப்பில் கிரிக்கெட் வீரர்களை வைத்து விழிப்புணர்வு காணொலி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

Team India becomes Team Mask Force in fight against COVID-19
Team India becomes Team Mask Force in fight against COVID-19

By

Published : Apr 18, 2020, 5:35 PM IST

கோவிட்-19 பெருந்தொற்றினால் இதுவரை இந்தியாவில் 14ஆயிரத்திற்கும் அதிமானோர் பாதிக்கப்பட்டும், 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பு செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வீட்டைவிட்டு வெளியே வரும் மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும், முடிந்தளவு வீட்டிலேயே இருக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது. இதனை வலியுறுத்தும் விதமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் #TeamMaskForce என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, ஸ்மிருதி மந்தனா, ரோஹித் சர்மா, ஹர்பஜன் சிங், இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர், விரேந்திர சேவாக், ராகுல் டிராவிட், மித்தாலி ராஜ், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் முகக் கவசம் அணிவது குறித்தும், அரசு அறிவுறுத்தியுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பின்பற்றுமாறும், இப்பெருந்தொற்றை எதிர்த்து நாம் போராட வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ள #TeamMaskForce விழிப்புணர்வு காணொலி கிரிக்கெட் ரசிகர்களாலும், விளையாட்டு வீரர்களாலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:தோனி போன்ற ஒருவருக்கு பந்துவீச கற்றுக்கொள்ளுங்கள் - கோரி ஆண்டர்சன்!

ABOUT THE AUTHOR

...view details