டி10லீக் தொடரின் இரண்டாவது சீசன் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஏழாவது லீக் ஆட்டத்தில் டேரன் சமி தலைமையிலான நார்த்தன் வாரியர்ஸ் அணி, மொயின் அலி தலைமையிலான அபுதாபி டீம் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற நார்த்தன் வாரியர்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய வாரியர்ஸ் அணியில் ரஸ்சல் மற்றும் சாம் பில்லிங்ஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதன் மூலம் வாரியர்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 91 ரன்களை சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரஸ்சல் 37 ரன்களையும், பில்லிங்ஸ் 35 ரன்களையும் குவித்தனர்.
அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய அபுதாபி அணி தொடக்கத்தில் டிக்வில்லா விக்கெட்டை இழந்து தடுமாறியது. அடுத்து களமிறங்கிய லூக் ரைட் மற்றும் மொயின் அலி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதன் மூலம் டீம் அபுதாபி அணி 8.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லுக் ரைட் 48 ரன்களை எடுத்தார்.
இதன் மூலம் டீம் அபுதாபி அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் நார்த்தன் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி டி10 லீக்கில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. அணியை வெற்றி பெற செய்த லுக் ரைட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: டி10 லீக்: தரங்கா அதிரடியில் டெல்லியை வீழ்த்தியது கர்நாடகா டஸ்கர்ஸ்!