இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியில் அதிரடி வீராங்கனையாகத் திகழ்ந்தவர் சாரா டெய்லர். இங்கிலாந்து அணிக்காக இதுவரை 226 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 6,500 ரன்களைக் குவித்துள்ளார். இதில் ஏழு சதங்கள், 36 அரைசதங்களும் அடங்கும்.
மேலும் விக்கெட் கீப்பிங் முறையில் 232 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீராங்கனை என்னும் பெருமையையும் பெற்றார்.
தற்போது 31 வயதாகும் சாரா டெய்லர், 2019ஆம் ஆண்டு உளவியல் பிரச்சினைகள் காரணமாக கிரிக்கெட்டிலிருந்து திடீரென விலகுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.