நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி டிச.18ஆம் தேதி ஆக்லாந்தில் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டிக்கான நியூசிலாந்து அணி இன்று (டிசம்பர் 12) அறிவிக்கப்பட்டது.
இதில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில் ஓய்வளிக்கப்பட்ட கேப்டன் கேன் வில்லியம்சன், வேகப்பந்துவீச்சாளர் டிரண்ட் போல்ட் ஆகியோர் இரண்டாவது டி20 போட்டிக்கான அணியில் இடம்பிடித்துள்ளனர்.
அதேசமயம் காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர்கள் லோக்கி ஃபர்குசன், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக மிட்செல் சாண்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் முதல் டி20 போட்டிக்கான அணியில் டிக்கர், மார்க் சாப்மேன், பிரேஸ்வெல் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ராஸ் டெய்லர், மோசமான ஃபார்ம் காரணமாக டி20 அணியிலிருந்து நீக்கப்படுவதாக, நியூசிலாந்து கிரிக்கெட் தேர்வாளர் கவின் லார்சன் தெரிவித்துள்ளார்.