தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

முகுந்த், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் அசத்தல்; ம.பி. மிரட்டிய தமிழ்நாடு!

ஜெய்ப்பூர்: 2019-20ஆம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே தொடரில் மத்தியப் பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 211 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வெற்றிபெற்றது.

தமிழ்நாடு

By

Published : Oct 13, 2019, 2:46 PM IST

2019-20ஆம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே தொடர் விறுவிறுப்பான கட்டததை எட்டியுள்ளது. இதில் இன்றைய ஆட்டத்தில் தமிழ்நாடு அணியை எதிர்த்து மத்தியப் பிரதேச அணி ஆடியது. இதில் டாஸ் வென்ற மத்தியப் பிரதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ததையடுத்து, தமிழ்நாடு சார்பாக அபினவ் முகுந்த் - முரளி விஜய் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

இதில் முரளி விஜய் 24 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த அபராஜித் 6 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதையடுத்து முகுந்த் - விஜய் சங்கர்ஜோட் இணைந்தது. இந்த இணை மத்தியப் பிரதேச அணியின் பந்துவீச்சைப் பதம் பார்த்தது. சிறப்பாக ஆடிய அபினர் முகுந்த் சதம் விளாசி 147 ரனகளிலும், விஜய் சங்கர் 90 ரன்களிலும் ஆட்டமிக்க, இறுதி நேரத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடியாக 28 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து அசத்தினார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் தமிழ்நாடு அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 360 ரன்கள் எடுத்தது.

தினேஷ் கார்த்திக்

அதையடுத்து இமாலய இலக்குடன் களமிறங்கிய மத்தியப் பிரதேச அணி தமிழ்நாடு அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அந்த அணியின் முக்கிய வீரர்களான கேப்டன் நமன் ஓஜா 24 ரன்களும், யாஷ் துபே 28 ரன்களும், ஆனந்த் பயஸ் 34 ரன்களிலும் ஆட்டமிழக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். மத்தியப் பிரதேச அணி 28.4 ஓவரகளில் 149 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தமிழ்நாடு அணி சார்பாக முருகன் அஸ்வின் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 8 போட்டிகளில் வெற்றிபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: #RolexShMasters - இளம் வீரர்களிடம் தோல்வியடைந்த ஃபெடரர், ஜோகோவிச்!

ABOUT THE AUTHOR

...view details