சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணியின் சாதனையை ரொமேனியா அணி முறியிடித்துள்ளது. ரொமேனியா கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இல்ஃபோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில், ரொமேனியா - துருக்கி அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி நடைபெற்றது. அதில், முதலில் பேட்டிங் செய்த ரோமேனியா அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜீனியர் சிவக்குமார் பெரியாழ்வார் இடம்பெற்றிருந்தார். அவர், தனது சிறப்பாக பேட்டிங்கால் துருக்கி அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.
தமிழ்நாடு வீரரின் உதவியால் டி20யில் சாதனை படைத்த ரொமேனியா - ரோமேனியா அணியில் தமிழக வீரர்
தமிழ்நாட்டைச் சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜீனியரின் உதவியால் ரொமேனியா அணி டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளது.
40 பந்துகளில் 105 ரன்கள் அடித்திருந்த நிலையில் அவர் ஆட்டமிழந்ததால், ரொமேனியா அணி 20 ஓவர்களில் 226 ரன்களைக் குவித்தது. இதைத்தொடர்ந்து, பேட்டிங் செய்த துருக்கி அணி 13 ஓவர்களுக்குள் 53 ரன்களுக்கு சுருண்டது. இதனால், ரொமேனியா அணி இப்போட்டியில் 173 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இதன்மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் கணக்கில் வெற்றிபெற்ற முதல் அணி என்ற புதிய சாதனையை அந்த அணி படைத்துள்ளது. இதனால், 2007இல் இலங்கை அணி கென்யாவை 172 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி படைத்திருந்த சாதனை முறியடிக்கப்பட்டது.