தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டி20 தரவரிசைப் பட்டியல்: முதலிடத்தைப் பிடித்து அசத்திய மாலன்! - விராட் கோலி

ஐசிசி வெளியிட்ட வீரர்களுக்கான சர்வதேச டி20 தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

T20I rankings: Rahul & Kohli remain in top 10, Malan moves to No. 1
T20I rankings: Rahul & Kohli remain in top 10, Malan moves to No. 1

By

Published : Sep 9, 2020, 5:09 PM IST

கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், அயர்லாந்து, ஆஸ்திரேலிய அணிகளுடனான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் தற்போது இங்கிலந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.

இதில் நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இருப்பினும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) வீரர்களுக்கான சர்வதேச டி20 தரவரிசையை இன்று (செப்.09) வெளியிட்டது. இதில் கடந்த ஓராண்டாக முதலிடத்தில் இருந்து வந்த பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாமை பின்னுக்குத் தள்ளி, இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் டேவிட் மாலன் முதலிடம் பிடித்து அசத்தினர்.

மேலும் இந்த தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் கே.எல். ராகுல் நான்காவது இடத்தையும், கேப்டன் விராட் கோலி ஒன்பதாவது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளனர்.

அதேபோல் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப்பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கானும், ஆல்ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் முகமது நபியும் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:டி20: பட்லரின் அதிரடியில் தொடரை வென்ற இங்கிலாந்து!

ABOUT THE AUTHOR

...view details