கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, தற்போது மீண்டும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் பார்வையாளர்களின்றி நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் இந்த ஆண்டு இறுதியில் இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் அடங்கிய தொடரை நடத்த இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் திட்டமிட்டுள்ளன. சமீபத்தில் இத்தொடருக்கான தற்காலிக அட்டவணையும் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. அதன்படி,
டெஸ்ட் கிரிக்கெட்: விராட் கோலி(கேப்டன்), மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, கே.எல்.ராகுல், புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, சுப்மன் கில், சஹா, ரிஷப் பந்த், பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ், சைனி, குல்தீப் யாதவ், ஜடேஜா, அஸ்வின், சிராஜ்.
ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணைக்கேப்டன்), தவான், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, மயங்க் அகர்வால், ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், பும்ரா, ஷமி, சைனி, தாக்கூர்.
டி20 கிரிக்கெட்: விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணைக்கேப்டன்), சஞ்சு சாம்சன், தவான், மயங்க் அகர்வால், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், சஹால், பும்ரா, ஷமி, சைனி, தீபக் சஹார், வருண் சக்ரவர்த்தி.
மேலும் கூடுதல் வீரர்களாக நடராஜன் தங்கராசு, நாகர்கொட்டி, இஷான் பரெல், கார்த்திக் தியாகி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம் காயம் காரணமாக நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா இத்தொடரிலிருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியின் துணைக்கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐபிஎல் 2020: டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு!