அனைத்து நாட்டு கிரிக்கெட் சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்ளும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடக்கவுள்ளது. இந்தக் கூட்டத்தில் டி20 உலகக்கோப்பையை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பிசிசிஐ முக்கிய அலுவலர் ஒருவர் பேசுகையில், ''டி20 உலகக்கோப்பைத் தொடர் நடத்துவதில் பல சிக்கல்கள் எழுந்துள்ளன. கரோனா பெருந்தொற்று சூழல் முடிவுக்கு வந்த பின், இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் விமான பயணங்களுக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
கரோனா சூழல் முடிவடைந்த உடனே ரசிகர்களை அதிகளவில் ஒரே இடத்தில் குவிப்பதும் சரியானதல்ல. அதேபோல் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் உலகக்கோப்பை நடந்தால், போக்குவரத்து அந்த மாதங்களுக்குள் இயக்கப்படுமா என்பது சந்தேகமே.
சிலர் ஜூன் மாதத்தில் நிலைமை சரியாகும் என்கிறார்கள், சிலர் ஆகஸ்ட் மாதத்தில் சூழல் பழைய நிலைக்குத் திரும்பும் என்கிறார்கள். ஆனால் எப்போது நிலைமை சீராகும் என்பது சந்தேகமே.