இதற்கு முன்னதாக நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரின் இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணியை கர்நாடக அணி வீழ்த்தியிருந்ததால், இந்த போட்டியில் தமிழ்நாடு அணி பதிலடிக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
2019-20ஆம் ஆண்டுக்கான சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பைக்கான இறுதிப் போட்டி சூரத் லாலாபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய ராகுல் - தேவ்தத் ஆகியோர் கர்நாடக அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ராகுல் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த மயாங்க் அகர்வால் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த தேவ்தத் - கேப்டன் மணீஷ் பாண்டே இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த இளம் வீரர் தேவ்தத் 32 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்னர் வந்த ரோஹன் மணீஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்ந்து ரன்களை எடுத்தார். அதியடுத்து முருகன் அஸ்வின் பந்தில் ரோஹன் ஆட்டமிழக்க, கருண் நாயர் - மணீஷ் இணை இறுதி நேரத்தில் அதிரடியாக ஆடி கர்நாடக அணியின் ஸ்கோரை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் என்று உயர்த்தியது.
181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு, ஷாரூக் கான் - நிஷாந்த இணை தொடக்கம் கொடுத்தது. நிஷாந்த் 14 ரன்களுக்கும், ஷாரூக் 16 ரன்களிளும் ஆட்டமிழக்க, தமிழ்நாடு அணி 37 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.