உள்ளூர் டி20 தொடரான சயீத் முஷ்டாக் அலி பெரும் எதிர்பார்ப்புக்ளை கிளப்பி வருகிறது. இதில் எலைட் குருப் இ பிரிவில் நேற்று (ஜன. 13) நடைபெற்ற லீக் போட்டியில் கேரளா அணி - மும்பை அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற கேரளா அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய மும்பை அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஆதித்யா டாரே இணை அதிரடியான தொடக்கத்தை தந்தது.
இதில் ஜெய்ஸ்வால் 40 ரன்களும், ஆதித்யா டாரே 42 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 38 ரன்களை சேர்த்தார்.
அதன்பின் வந்த வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை எடுத்தது.