ஆஸ்திரேலியாவில் மகளிர் அணிகளுக்கான பிக் பாஷ் டி20 தொடரின் ஐந்தாவது சீசன் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில், அண்மையில் நடந்த லீக் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின. இதில், 166 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணி 12.2 ஓவர்களில் 72 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது.
#WBBL05: 'ஒரு ரன் எடுப்பதற்குள் ஆறு விக்கெட்டுகள் க்ளோஸ்' - சிட்னி சிக்சர்ஸ் தோல்வி! - ஒரு ரன்னில் ஆறு விக்கெட்டுகள்
மகளிர் பிக் பாஷ் டி20 தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிரான போட்டியில், சிட்னி சிக்சர்ஸ் அணி ஒரு ரன்னில் ஆறு விக்கெட்டுகளை இழந்து தோல்வியடைந்தது.

அதன்பின், சிட்னி சிக்சர்ஸ் அணியின் பேட்டிங் படுமோசமாக இருக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏனெனில், அமெலா கர்-இன் சிறப்பான சுழற்பந்துவீச்சினால் அந்த அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டாய் சரிந்தன. சிட்னி சிக்சர் அணியின் வீராங்கனைகள் ஒருவருக்குப் பின் ஒருவராக வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர்.
இறுதியில், அந்த அணி 73 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குறிப்பாக, அந்த அணி கடைசி ஆறு விக்கெட்டை ஒரு ரன்னில் பறிகொடுத்தது. 12.2 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 72 ரன்களை எடுத்திருந்த அந்த அணி அடுத்த 2.1 ஓவர்களில் 73 ரன்னுக்கு சுருண்டது. இதனால், பிரிஸ்பேன் ஹீட் அணி, இப்போட்டியில் 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பிரிஸ்பேன் ஹீட் அணி தரப்பில் அதிகபட்சமாக அமெலா கர் மூன்று விக்கெட்டுகளை எடுத்தார்.