தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மும்பை அணியை வழிநடத்தும் சூர்யகுமார் யாதவ்! - ஆதித்யா டாரே

அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள சயீத் முஷ்டாக் அலி டி20 தொடரில் மும்பை அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Suryakumar Yadav to lead Mumbai in Syed Mushtaq Ali Trophy
Suryakumar Yadav to lead Mumbai in Syed Mushtaq Ali Trophy

By

Published : Dec 27, 2020, 9:44 AM IST

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவின் உள்ளூர் டி20 தொடரான சயீத் முஷ்டாக் அலி தொடர் அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இத்தொடர் ஜனவரி 10ஆம் தேதி முதல் ஜனவரி 29ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், இப்போட்டிகளுக்கான மைதானங்களையும் பிசிசிஐ அறிவித்திருந்தது.

இதையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு மாநில அணிகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்தொடருக்கான 20 பேர் அடங்கிய மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மும்பை அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவும், துணைக்கேப்டனாக ஆதித்யா டாரேவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அணியின் இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃப்ராஸ் கான், சித்தேஷ் லாத், துஷார் தேஷ்பாண்டே ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மும்பை அணி: சூர்யகுமார் யாதவ் (கே), ஆதித்யா தாரே, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆகர்ஷித் கோமல், சர்ஃபராஸ் கான், சித்தேஷ் லாத், சிவம் துபே, சுபம் ரஞ்சனே, சுஜித் நாயக், சாய்ராஜ் பாட்டீல், துஷார் தேஷ்பாண்டே, தவால் குல்கர்னி, மினாத் மஞ்ச்ரேகர், பிரதமேஷ் டேக், அதர்வா அங்கோலேகர், ஷாஷாங்க் அட்டார்டே, ஷம்ஸ் முலானி, ஹார்திக் தமோர், ஆகாஷ் பார்க்கர், சுஃபியன் ஷேக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க:பாக்ஸிங் டே டெஸ்ட்: மீண்டும் மிரட்டும் ஆஸ்திரேலியா; தடுமாற்றத்தில் இந்தியா!

ABOUT THE AUTHOR

...view details