இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஜனவரி 15ஆம் தேதி பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது. முன்னதாக நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றியடைந்து டெஸ்ட் தொடரில் சமநிலையில் உள்ளன.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா காயமடைந்தார். இதன் காரணமாக அவர் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசவில்லை.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜடேஜாவுக்கு இன்று (ஜனவரி 12) அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.