இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்னை அணியினர் சென்றனர். இவர்கள் அனைவரும் ஏழு நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், நேற்று (ஆக. 28) சென்னை அணியைச் சேர்ந்தவர்களில் சிலருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஆக. 29) சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் தொடரிலிருந்து தான் விலகுவதாக அறிவித்துள்ளார். சொந்தக் காரணங்களுக்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் ரெய்னாவுக்கு, சென்னை அணி நிர்வாகம் தரப்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பஞ்சப் பதான்கோட் மாவட்டத்தின் தரியால் கிராமத்தைச் சேர்ந்த ரெய்னாவின் நெருங்கிய உறவினரான அசோக் குமார் என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் வீடு புகுந்து தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்தத் தாக்குதலின்போது அசோக் குமாரின் மனைவி ஆஷா தேவி, அவரது மகன்கள் அபின், குஷால் ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.