இந்திய கிரிக்கெட் அணியின் கரிஸ்மேட்டிக் வீரர் சுரேஷ் ரெய்னா. இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையிலான போட்டிகளில் சதம் விளாசிய முதல் வீரர். இவர் சுதந்திர தினத்தன்று முன்னாள் கேப்டன் தோனியுடன் சேர்ந்து ஓய்வை அறிவித்தார்.
இவர்களின் ஓய்வு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. அதிலும் ரெய்னாவின் ஓய்வு பலருக்கும் ஆச்சரியத்தையும் அளித்தது. இந்நிலையில் ஓய்வை அறிவித்த ரெய்னாவுக்கு ரசிகர்களும், முன்னாள் இந்நாள் வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரெய்னாவின் கிரிக்கெட் வாழ்க்கைப் பற்றி முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பேசியுள்ளார். அதில், '' 2004, 2005ஆம் ஆண்டில் வந்த வீரர்களில் மிகவும் ஆச்சரியமளித்தவர் ரெய்னா. யு-19 கிரிக்கெட்டின்போது மிகச்சிறப்பாக செயல்பட்டவர். ஒரு கட்டத்தில் அணியின் மிகமுக்கிய வீரராக சுரேஷ் ரெய்னா அதை தான் கடந்த 15 ஆண்டுகளாக செய்து வந்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி பெற்ற அனைத்து முக்கிய வெற்றிகளுக்கும் ரெய்னா முக்கிய காரணமாக இருந்துள்ளார். உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் ரெய்னாவின் பங்கு அளப்பறியது.