சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்று விளையாடியது. இதையடுத்து வரும் 11ஆம் தேதி முதல் பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையே இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது.
10 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் நடக்கவுள்ள டெஸ்ட் தொடரில் இலங்கை அணி பங்கேற்க உள்ளதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை வீரர்கள் பாகிஸ்தானுக்கு சென்றுவிட்ட நிலையில், இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் லக்மல் டெங்கு காய்ச்சல் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.