தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பிசிசிஐயை வறுத்தெடுத்த சுனில் கவாஸ்கர் - முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர்

சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரை ஏளனமாகப் பேசிய பிசிசிஐ அலுவலரையும், பிசிசிஐ நிர்வாகத்தையும் முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் காட்டமாக விமர்சித்துள்ளார்.

sunil-gavaskar-slams-bcci-official-for-insensitive-comment
sunil-gavaskar-slams-bcci-official-for-insensitive-comment

By

Published : Mar 20, 2020, 7:43 PM IST

சையத் முஷ்டாக் அலி என்பவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக 1934ஆம் ஆண்டு முதல் 1948ஆம் ஆண்டு வரை ஆடியவர். 11 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய சையத் முஷ்டாக் அலி, இந்திய அணிக்காக வெளிநாட்டில் சதம் விளாசிய முதல் வீரராவார். 1936ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் மான்செஸ்டர் மைதானத்தில் 112 ரன்கள் விளாசினார். இவரை கௌரவிக்கும் விதமாக இவரது பெயரில் 2009ஆம் ஆண்டு முதல், உள்நாட்டு வீரர்களுக்காக பிசிசிஐயால் நடத்தப்படும் டி20 தொடரே சையத் முஷ்டாக் அலி டிராபியாகும்.

சையத் முஷ்டாக் அலி டிராபி

ரஞ்சி டிராபி தொடருக்குச் சரிசமமாகப் பார்க்கப்படும் சையத் இத்தொடர் என்பதால் வீரர்களிடையே மிகப்பெரிய ஆட்டத்திறன் வெளிப்படும். இந்தத் தொடர் குறித்து பிசிசிஐ அலுவலர் ஒருவர் ஏளனமாகப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சையத் முஷ்டாக் அலி

வெளிநாட்டு வீரர்கள் இல்லாமலேயே ஐபிஎல் தொடர் நடக்குமா என பிசிசிஐ அலுவலரிடம் கேட்டபோது, ''ஆட்டத்தின் தரம் மோசமாக இருக்கக் கூடாது என்பதால் அதனைப்பற்றி பிசிசிஐ முடிவுசெய்யவுள்ளது. இன்னொரு சையத் முஷ்டாக் அலி டிராபி போல் ஆடுவதை விரும்பவில்லை'' என்று அவர் கூறியிருந்தார்.

இது பல்வேறு தரப்பினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தனியார் நாளிதழ் ஒன்றில் எழுதியுள்ள முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், ''சையத் முஷ்டாக் அலி டிராபியை ஏளனமாகப் பேசியதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணிக்காக முதல் வெளிநாட்டு சதத்தைப் பதிவு செய்தவரின் பெயருக்கு அவமானம் செய்துள்ளனர். நீங்கள் சொல்வதுபோல் அந்தத் தொடர் மோசமானதால இருந்தால் ஏன் அதனை பிசிசிஐ நடத்தவேண்டும்? அந்தத் தொடர் ஏன் மோசமானதாக இருக்கிறது என்பதையும் பிசிசிஐ தான் கூறவேண்டும்.

சையத் முஷ்டாக் அலி தொடரில் இந்திய வீரர்களே ஆடுவது இல்லை. இந்திய வீரர்கள் பங்கேற்பது போல் அட்டவணை தயார் செய்ய வேண்டும். அட்டவணையில் கோட்டை விடுவது யார்'' எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க:#onthisday: புற்றுநோயையும் பொருட்படுத்தாமல் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த நாயகன் யுவராஜ்!

ABOUT THE AUTHOR

...view details