இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி நேற்று (ஆக. 15) சர்வதேச போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். அவர் ஓய்வை அறிவித்த சில மணி நேரங்களிலேயே சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
இதைத்தொடர்ந்து, ஒடிஸா மாநிலம் பூரி நகரைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்ஷன் பட்னாயக், பூரி கடற்கரை அருகே தோனி மற்றும் ரெய்னாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.