இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, நாளை இலங்கை லெவன் அணியுடனான முதலாவது பயிற்சி ஆட்டத்தில் களமிறங்கவுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இங்கிலாந்து வீரர்கள் இலங்கை அணி வீரர்களுடன் கைகுலுக்குவதை தவிர்க்கவுள்ளோம் என தெரிவித்திருந்தனர்.
இதனை இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் இலங்கை அணி வீரர்களுடன் கைகுலுக்க போவதில்லை என பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன், "மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள் ஸ்டோக்ஸ், இல்லையெனில் அது உங்களை அடித்துவிட போகிறது” என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை இங்கிலாந்தைச் சேர்ந்த நாளிதழ் ஒன்று வெளியிட்டிருந்தது.
இதனைக் கண்ட பென் ஸ்டோக்ஸ், அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ’மிட்செல் அப்படி நடப்பதை விரும்புவார் போல’ என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு ஐபிஎல் அணி உரிமையாளர்கள் கடிதம்