கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 21 நாள்கள் பொதுமக்கள் அனைவரும் வெளியே வரத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் வீட்டிலேயே முடங்கும் சூழல் நிலவிவருகிறது.
இந்நிலையில் நேற்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மாவை இன்ஸ்டாகிராமில் நேர்காணல் செய்தார். அதில் கெவின் பீட்டர்சன் பாண்டிங்குடன் வேலைசெய்த அனுபவம் பற்றி கேட்டபோது,
''2013ஆம் ஆண்டு மும்பை அணியின் கேப்டனாக ரிக்கி பாண்டிங் ஒப்பந்தம்செய்யப்பட்டார். ஆனால் தொடரின் பாதியிலேயே கேப்டன்ஷிப்பை என்னிடம் கொடுத்து, பயிற்சியாளர் குழுவோடு இணைந்து அணிக்காகப் பணியாற்றினார்.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால் தொடரின் பாதியில் பதவி விலகிவிட்டு அணிக்குப் பயிற்சியாளராக வந்தது மிகவும் தைரியமான முடிவு. இளம் வீரர்களுக்கு பேட்டிங் பயிற்சியும், எனக்கு கேப்டன்சி பற்றி நுணுக்கங்களையும் கற்றுக் கொடுத்தார்.