ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக். இவர் தற்போது 'Spirit of Cricket' என்ற புத்தகத்தை எழுதிவருகிறார். இதற்காக பல்வேறு நாடுகளுக்குப் பயணம்செய்து, அங்குள்ள மக்களையும், கிரிக்கெட் வீரர்களையும் சந்தித்துவருகிறார்.
இந்தியாவில் கிரிக்கெட் உயிருக்கு இணையாக நேசிக்கப்படுவதால் இந்திய கிரிக்கெட் பற்றியும், கிரிக்கெட் ரசிகர்களையும் ஸ்டீவ் வாக் சந்தித்துவருகிறார்.
அதன் ஒரு பகுதியாக கொல்கத்தா வந்த ஸ்டீவ் வாக், நேற்று பராக்பூர் பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் குழந்தைகளை சந்தித்தார். இதையடுத்து இன்று பெங்கால் - டெல்லி அணிகளுக்கு இடையிலான ரஞ்சி டிராபி போட்டியின்போது ஈடன் கார்டன்ஸ் மைதானம் வந்தார். இந்தச் சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கொல்கத்தா மைதானத்தில் ஸ்டீவ் வாக்கிற்கு ஏராளமான நினைவுகள் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியின் முதல் உலகக்கோப்பையை வென்றது கொல்கத்தாவில்தான் என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: ஆர்சிபி அணியிலிருந்து நீக்கப்பட்டது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியது: சர்ஃபராஸ் கான்!