தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஸ்டீவ் மிகவும் சுயநலம் மிக்க கிரிக்கெட்டர் - ஷேன் வார்னே - சுழற்பந்துவீச்சு ஜாம்பவான்

ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே, தனது அணியின் சக வீரரான ஸ்டீவ் வாக்கை மிகவும் சுயநலமிக்க கிரிக்கெட் வீரர் என தெரிவித்துள்ளார்.

Steve was easily the most selfish cricketer I ever played with: Warne
Steve was easily the most selfish cricketer I ever played with: Warne

By

Published : May 16, 2020, 3:10 PM IST

கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் இப்பெருந்தொற்றின் முன்னெச்சரிக்கையாக உலக நாடுகள் பலவற்றிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஸ்டீவ் வாக் சர்வதேச கிரிக்கெட்டில் எத்தனை முறை ரன் அவுட் ஆகியுள்ளார் என்ற ட்விட்டர் புள்ளி விவரத்திற்கு பதிலளித்த சக அணி விரர் ஷேன் வார்னே, ‘ஸ்டீவ் வாக் இதுவரை 104 முறை ரன் அவுட் ஆகியுள்ளார். அதில் 73 தங்களது துணை வீரர்கள் மூலமாக ரன் அவுட் செய்யப்பட்டுள்ளார். இதனால் உலகில் அதிகமுறை ரன் அவுட் ஆனா வீரர் என்ற பெருமையை ஸ்டீவ் பெற்றுள்ளார்’ என்று பதில் அளித்தார்.

அதன்பின், மீண்டும் தனது ட்விட்டர் பதிவில், ‘நான் ஸ்டீவை வெறுக்கவில்லை. இதை நான் ஆயிரம் முறை கூறிவுள்ளேன். சில நாட்களுக்கு முன்பு கூட என்னுடைய சிறந்த ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் வாக்கை தேர்தெடுத்திருந்தேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் நான் விளையாடியதிலேயே ஸ்டீவ் வாக் மட்டுமே மிகவும் சுயநலமான கிரிக்கெட் வீரர். அதற்கு இந்த மதிப்பீடும் ஓர் உதாரணம்’ என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த மாதம் ஷேன் வர்னே மதிப்பிட்ட தனது சிறந்த ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் வாக் இடம்பிடித்திருந்தார்.

வார்னேவின் சிறந்த ஆஸ்திரேலிய அணி: மேத்யூ ஹெய்டன், மைக்கேல் ஸ்லெட்டர், ரிக்கி பாண்டிங், மார்க் வாக், ஆலன் பார்டர்(கேப்டன்), ஸ்டீவ் வாக், ஆடம் கில்கிறிஸ்ட், டிம் மே. ஜேசன் கில்லெஸ்பி, கிளென் மெக்ராத், புரூஸ் ரீட்.

இதையும் படிங்க:கடுமையான நெறிமுறைகளுடன் பயிற்சியை தொடங்கவுள்ள இங்கிலாந்து வீரர்கள்

ABOUT THE AUTHOR

...view details