இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இரு தினங்களுக்கு முன்பு தனது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்ய லண்டன் சென்றிருந்தார்.
இந்நிலையில் இன்று அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறுவை சிகிச்சைக்குப் பின் எடுத்த தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியளித்துள்ளார்.
பாண்டியாவின் பதிவில், ‘அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. எனக்காக வாழ்த்துகளைத் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றிகள். நான் எப்போது வேண்டுமானலும் அணிக்கு திரும்புவேன். அதுவரை காத்திருங்கள்’ என பதிவிட்டு அவரது புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.
அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த ஹர்திக் பாண்டியா தற்போது ஹர்திக் பாண்டியாவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க: 'அண்ணே மண்ட பத்தரம்...' - குருணல் பாண்டியா பந்துவீச்சை வெளுத்துக்கட்டிய ஹர்திக் பாண்டியா