தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதை நான் எப்போதும் ரசித்துள்ளேன்' - ஷாகித் அஃப்ரிடி! - இந்தியா- பாகிஸ்தான் 1999

இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது தனக்கு எப்போதும் பிடிக்கும் என்றும், பாகிஸ்தானை விட இந்தியாவில் தான் தனக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர் என்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

stand-by-what-i-said-in-2016-about-love-i-received-from-india-afridi
stand-by-what-i-said-in-2016-about-love-i-received-from-india-afridi

By

Published : Jul 5, 2020, 7:05 PM IST

பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர ஆல் ரவுண்டரும், கேப்டனுமான ஷாகித் அப்ரிடி, சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதை தான் எப்போதும் ரசித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அஃப்ரிடி, "நான் எப்போதும் இந்தியாவுடன் விளையாடுவதை ரசித்திருக்கிறேன். நாங்கள் அவர்களை மிகவும் சுலபமாக சில முறை வென்றுள்ளோம். போட்டியின் பின்னர் அவர்கள் எங்களிடம் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நாங்கள் அவர்களை வென்றுள்ளோம் என்று நான் நம்புகிறேன்.

அதே சமயம், வேறு எந்த நாட்டையும் விட இந்தியாவில் எனக்கு அதிக அன்பு கிடைத்துள்ளது என்று 2016இல் நான் கூறியது நினைவிற்கு வருகிறது. ஒரு கேப்டனாகவும் பாகிஸ்தானின் தூதராகவும் நான் அங்கு சென்றிருந்த தருணம் அது. இந்தியா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு எதிராக நான் விளையாடும் போது, அதிக அழுத்தத்தை உணர்ந்துள்ளேன். ஏனெனில் அவை நல்ல அணிகள், மிகவும் வலிமையான அணிகள்.

எனது மறக்க முடியாத இன்னிங்ஸ் சென்னையில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நான் அடித்த 141 ரன்கள் தான். இத்தொடரின் போது முதலில் நான் அணியில் இடம்பிடிக்கவில்லை. பின்னர் வாசிம் அக்ரம் தலைமையிலான தேர்வர்களின் உதவியோடு மீண்டும் நான் அணியில் இணைந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details