இலங்கை அணி தென்னாபிரிக்காவில் சுற்றுபயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டிகளை விளையாடி வந்தது. முதலில் நடந்த 4 போட்டிகளையும் படு தோல்வி அடைந்த இலங்கை அணி கடைசி ஒரு நாள் போட்டியிலும் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தி வைட்வாஷ் தோல்வியை பெற்றுள்ளது.
இலங்கை அணி படுதோல்வி - இலங்கை
கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி படுதோல்வி அடைந்து தொடரை 5-0 என பறி கொடுத்துள்ளது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை அணி, பேட்ஸ்மன்களின் மோசமான ஆட்டத்தால் 225 ரன்களுக்கு சுருன்டது. இலங்கை அணிக்கு அதிகமாக குஷால் மேன்டிஸ் 56 ரன்கள் எடுத்தாா். 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என சுலபமான இலக்கை நோக்கி களம் இறங்கிய தென்னாபிரிக்கா 28 ஓவா்களில் 2 விக்கேட்டுகள் இழந்து 135 ரன்கள் எடுத்த நிலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் தடைபட்டது.
இரண்டு மணி நேரம் ஆகியும் ஆட்டத்தை தொடர முடியாத நிலையில் நடுவா்கள் டி.எல்.எஸ் முறைபடி தென்னாபிரிக்கா வெற்றி அடைந்ததாக அறிவித்தனா். தென்னாபிரிக்காவுக்காக அதிகபட்சமாக எய்டன் மார்க்கரம் ஆட்டம் இழக்காமல் 67 ரன்கள் எடுத்தாா்.