இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிகா பிரசாத். இதுவரை இலங்கை அணிக்காக 25 டெஸ்ட் போட்டிகளில் 75 விக்கெட்டுகளும், 24 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளும் கைப்பற்றி உள்ளார்.
இலங்கை அணியின் முக்கிய பந்து வீச்சளார்களில் ஒருவராக திகழ்ந்து வந்த பிரசாத், தோள்பட்டை காயத்தினால் பல்வேறு போட்டிகளில் விளையாடும் வாய்ப்புகளை இழந்தார். இறுதியாக கடந்த 2015ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அவர் விளையாடினார்.