சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கமாக உலக சாலைப் பாதுகாப்பு டி20 கிரிக்கெட் தொடர் மும்பையில் நடைபெற்றுவருகிறது. இதில், இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து அணிகளைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஜாம்பவான் வீரர்கள் பங்கேற்கின்றனர்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இதன் முதல் போட்டியில் இந்திய லெஜண்ட்ஸ் அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸை வீழ்த்தியது.
இந்நிலையில், நேற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தில்ஷான் தலைமையிலான இலங்கை லெஜண்ட்ஸ் அணி, பிராட் ஹாடின் தலைமையிலான ஆஸ்திரேலிய லெஜண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை லெஜண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை எடுத்தது. அந்த அணி தரப்பில் ரொமேஷ் களுவதிரன 30, கமரா கபுகெதேர 28 ரன்கள் அடித்தனர். ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ் அணி சார்பில் ஸாவியர் டோஹர்டி, ஜேசன் கிரேசா, பிராட் ஹாட்ஜ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 162 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய லெஜண்ட்ஸ் அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டாகச் சரிந்தன. தொடக்க வீரர் மைக்கேல் க்ளிங்கர் ரன் ஏதும் அடிக்காமல், சமிந்தா வாஸ் பந்துவீச்சில் நடையைக் கட்டினார்.