இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளராக வலம் வரும்பர் ஷெஹான் மதுஷங்கா. தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இலங்கையிலும் ஜூன் மாதம் வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்நாட்டு அரசின் உத்தரவை மீறி மதுஷங்கா காரில் பயணித்ததாக காவல்துறையினர் அவரை நிறுத்தியுள்ளார். பின் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அரசால் தடைசெய்யப்பட்ட ஹெராயின் போதை பொருள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மதுஷங்காவை கைது செய்த காவல்துறையினர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.