பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் பாதுகாப்பு காரணம் கருதி இலங்கை அணியின் கேப்டன் மலிங்கா, திசாரா பெரேரா, மேத்யூஸ் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் பங்கேற்கவில்லை. இதனால், முற்றிலும் இளம் வீரர்களை கொண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி டி20 தொடரை வென்று அசத்தியது.
தற்போது, இலங்கை அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதில் பங்கேற்கும் இலங்கை அணியின் வீரர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இப்பட்டியலில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் பங்கேற்காமல் இருந்த இலங்கை அணியின் சீனியர் வீரர்கள் இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ளனர். அதேசமயம், பாகிஸ்தானுக்கு எதிரான தொடரின்மூலம் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான பனுக்கா ராஜபக்சே, ஒஷாடா ஃபெர்னான்டோ ஆகியோரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இடம்பெற்றுள்ளனர்.