இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா இதுவரை இலங்கை அணிக்காக ஆறு டெஸ்ட், 36 ஒருநாள், 22 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆகஸ்ட் மாதம் இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இவரது பந்துவீச்சு முறை சர்ச்சைக்குரிய விதத்தில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
'இனி நீ பந்துவீச வேண்டாம்!' - இலங்கை வீரருக்கு ஐசிசி தடை - அகிலா தனஞ்ஜெயா பந்துவீச்சு முறை
இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா பந்துவீச ஐசிசி ஓராண்டிற்கு தடைவிதித்துள்ளது.
!['இனி நீ பந்துவீச வேண்டாம்!' - இலங்கை வீரருக்கு ஐசிசி தடை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4494112-thumbnail-3x2-akila.jpg)
Akila Dananjaya
இதைத்தொடர்ந்து, சென்னையில் நடைபெற்ற சோதனையில் இவரது பந்துவீச்சு முறையில் முறைகேடு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இவர் வழக்கத்துக்கு மாறாக பந்தை நான்கு முதல் 17 டிகிரி கோணத்தில் பந்தை வீசுகிறார் என்பது அந்த சோதனையின் முடிவில் தெரியவந்தது.
இதனால், சர்வேதச போட்டிகளில் பந்துவீச இவருக்கு ஐசிசி ஓராண்டு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்னதாக, 2018 டிசம்பரில் ஐசிசி இவருக்குத் தடைவிதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.