உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் ’கிரிக்கெட் கடவுள்’ என அழைக்கப்படும் பெருமைக்குரியவர் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
ஸ்குவாஷ் ப்ளேயரான ’கிரிக்கெட் கடவுள்’ - #mumbai indians
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தற்போது ஸ்குவாஷ் விளையாட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.
![ஸ்குவாஷ் ப்ளேயரான ’கிரிக்கெட் கடவுள்’](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4255692-thumbnail-3x2-sachin.jpg)
அதன்பின் அவர் இந்திய அணியின் பயிற்சியாளரை தேர்வு செய்யும் மூவர் குழுவில் உறுப்பினராகச் செயல்பட்டார். சில காரணங்களால் தேர்வுக்குழுவிலிருந்து அவர் நீக்கப்பட்டார். தற்போது, ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக அவர் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஸ்குவாஷ் விளையாடும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், முடிந்தவரை அத்தனை விளையாட்டுகளையும் விளையாடுங்கள்! எல்லா விளையாட்டுகளும் மகிழ்ச்சி அளிப்பவையே, இந்தியாவின் நட்சத்திர ஸ்குவாஷ் வீரர் ரித்விக் பட்டாச்சார்யாவுடன் விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது. அவரிடம் சில விளையாட்டு யுக்திகளை கற்றுக்கொண்டேன் என பதிவிட்டுள்ளார். சச்சினின் ட்விட்டர் பதிவு ரசிகர்களின் ஆதரவோடு இணையத்தில் வைரலாகி வருகிறது.