இந்தியா முழுவதும் 72ஆவது குடியரசு தினம் இன்று (ஜன.26) கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து பல்வேறு துறைச்சார்ந்த பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய விளையாட்டு வீரர்களும் தங்களது குடியரசு தின வாழ்த்துக்ளைத் தெரிவித்து வருகின்றனர்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பதிவில்,"நம் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான குடியரசு தின வாழ்த்துகள். நமது தேசத்தின் கொள்கைகள் நமக்கு எப்போதும் வழிகாட்டியாகவுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, "நமது எதிர்காலம் என்ன என்பது இன்று நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்தது. அது நம் தேசத்தின் பலமாக இருக்கட்டும். அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்" என்று பதிவிட்டுள்ளார்.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரேன் ரிஜிஜூ, "அதிகாலையில் எனது இல்லத்தில் தேசியக் கொடியை ஏற்றி குடியரசு தினத்தை கொண்டாட்டத்துடன் தொடங்கினேன். இந்த குடியரசு தினத்தன்று அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது பதிவில், "நாட்டின் 72ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, நம் தேசத்தை சிறப்பானதாக மற்ற உதவிய ஒவ்வொரு இந்தியருக்கும் எனது வணக்கம். இந்த கடினமான காலங்களில் நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் பலமாக இருப்போம். அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் விரேந்திர சேவாக், இர்ஃபான் பதான், விவிஎஸ் லக்ஷ்மன், மல்யுத்த வீரார் பஜ்ரங் புனியா, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் என பல்வேறு பிரபலங்களும் தங்களது குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:பத்ம ஸ்ரீ விருது பெற்ற விளையாட்டு வீரர்கள்!