தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இலங்கை குண்டுவெடிப்புச் சம்பவம் : கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்! - கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்

டெல்லி: இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.

இலங்கை

By

Published : Apr 21, 2019, 8:36 PM IST

ஈஸ்டர் திருநாளான இன்று இலங்கையின் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் உட்பட எட்டு இடங்களில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் 207 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 450-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த நிகழ்வில் கொல்லப்பட்டவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில், கிரிக்கெட் வீரர்களும் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பதிவிட்டதில், இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்திய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலைப் பதிவிட்டுள்ளார். அதில், இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் கவலையளிக்கிறது. இதுபோன்ற தாக்குதல் சம்பங்களில் ஈடுபட்டவர்களுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

அதேபோல் தென்னாப்பிரிக்க இடதுகை பேட்ஸ்மேன் டுமினி தனது இரங்கலைப் பதிவிட்டுள்ளார். அதில், இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் கவலையளிக்கிறது. இந்தச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் சென்னை அணி வீரர் ஹர்பஜன் சிங், இலங்கையில் நடைபெற்ற சம்பவங்கள் கவலையளிக்கிறது. இலங்கை மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன் எனப் பதிவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details