தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

உலகக் கோப்பை இங்கிலாந்து அணிக்குதான்: சுனில் கவாஸ்கர் பளீர் பதில்! - சுனில் கவாஸ்கர்

2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

File Pic

By

Published : Mar 13, 2019, 7:40 PM IST

இது குறித்து அவர் பேசுகையில்,

'கடந்த இரண்டு உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் வரலாற்றைப் பார்த்தால் தொடரை நடத்தும் நாடுதான் கோப்பையை வென்றுள்ளது. 2011இல் இந்தியா அணியும், 2015இல் ஆஸ்திரேலிய அணியும் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

தற்போது அந்த வரிசையில், 2019ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து நடத்துகிறது. இதனால், இந்த தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றுவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக' தெரிவித்தார்.

மே 30ஆம் தேதி தொடங்கவுள்ள உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி, தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details